திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு.. காணொளி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் - முழு விவரம்!

CM Stalin : விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு தொகுதி வாரியாக அங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது.

tamil nadu cm stalin attended the Consultation meeting with dmk minister from Spain through video call ans

கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி துவங்கிய இந்த கலந்தாய்வு நாளை பிப்ரவரி 5ஆம் தேதி திங்கட்கிழமையுடன் நிறைவு பெற உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்பொழுது ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அங்கிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். 

இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என் நேரு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்தும், கட்சி சார்ந்த விஷயங்களையும், நிர்வாகிகள் கூறிய கருத்துக்களையும் ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கேட்டறிந்தார். 

DMK vs BJP : அமலாக்கத்துறை கதவை தட்டும் என எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை... பதிலடி கொடுத்த துரைமுருகன்

மேலும் அமைச்சர்களோடு அவர் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட ஒரு பதிவில் "வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 19-ஆம் நாள் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினேன்" என்று மு.க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். 

அதேபோல இந்த கலந்தாய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஆளுநர்கள் தங்களோடு உரையாற்றியதாகவும், இந்தியா கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்வதற்கான பணிகளை வேகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும்" கூறினார். 

குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு.. நேர்முக தேர்வு குறித்த அப்டேட் - TNPSC வெளியிட்ட மிக மிக முக்கிய தகவல் இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios