நீட் பிரச்சனை குறித்து உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்தாவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகளை எடுத்துரைத்துள்ளார்.
நீட் பிரச்சனை குறித்து உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்தாவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகளை எடுத்துரைத்துள்ளார். எனவே, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முதலமைச்சர், தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பிய நிலையில் நேற்று 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அதன்படி, டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசி, தமிழ்நாடு வளர்ச்சி பணிகள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் அவரை தி.மு.க.வின் எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் வாசலுக்கே சென்று வரவேற்றனர். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து தி.மு.க. எம்.பி.க்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

மேலும் தோழமை கட்சிகளின் எம்பிக்கள் பலர் அங்கு வந்து முதலமைச்சர் ஸ்டாலினை ஆர்வமாக சந்தித்தனர். நலம் விசாரித்த படி புன்னகைத்து பேசினர். அதன்பின் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. புது டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மேலும் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் வழங்கினார்.

பிரதமர் மோடியை சந்திப்பை தொடர்ந்து பல்வேறு மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தார். அந்த வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்த தமிழ்நாட்டிற்கு கூடுதல் பேரிடர் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் நீட் பிரச்சனை குறித்து உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக பதிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
