சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரையின்படி வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கொரோனா தடுப்புப் பணிகளுக்காக வழங்கிய 60 லட்சம் ரூபாய் நிதியை கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டித்திருந்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிடவும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

