தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் வழங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல்  வழங்கியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகளை விஞ்சும் அளவிற்கு  விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வெற்றி நடைபோட்டுவருகிறது. உலக நாடுகளே வியக்கும் வகையில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதுடன் முன்னேற துடிக்கும் நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது இந்தியா.  சமீபத்தில் நிலவை ஆராய இந்தியா ஏவிய சந்திராயன்2  உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அனைவரும் அறிவோம். அப்படிபட்ட சிறப்பு மிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டு அறை கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும், அதன் ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலும் இருந்து வருகிறது. இதன்மூலும் விண்வெளி ஆராய்ச்சியில் இவ்விரு மாநிலங்களும்  சிறப்பாக பங்களித்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பதுடன் தனிப் புகழ்பெற்றும் வருகின்றன. 

நாட்டிலேயே ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டா மட்டுமே  ராக்கெட் ஏவுவதற்கு அனைத்து அம்சங்களும் கொண்ட பகுதி என்பதே அதன் புகழுக்கு காரணம். தற்போது அதே வகையில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் ராகெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருப்பது ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில். இஸ்ரோவின் மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை தமிழகத்தில் அமைப்பதற்கான திட்டம் உள்ளது.  எனவே முதற்கட்டமாக இஸ்ரோ அமைப்பிற்கு நிலம் ஒதுக்கி தமிழக அரசு ஆவண செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அமைச்சர் ஆர். பி உதய குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

மதுரையில் இன்று , பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ - மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அமைசைசர் ஆர்.பி உதயகுமார்.  கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். மாணவர்கள் மன தைரியம், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும் என்றதுடன். தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க முதற்கட்டமாக நிலம் வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார். இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் அமைந்தால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன். இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையில் தமிழகம் சிறப்பான அடையாளத்தை பெறும் என்றே கூறலாம்.