Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... தொழில் முதலீடுகள் ஜம்முனு இருக்குமா?

வெளி நாடு சுற்றுப்பயணம் பற்றியும் அங்கே கிடைத்த தொழில் முதலீடுகள் பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே முதல்வரின் சுற்றுப்பயணம் மூலம் ஈர்த்த முதலீடுகள், கிடைக்க உள்ள தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.

Tamil nadu CM Edappadi K.Palanisamy returns chennai tomorrow
Author
Chennai, First Published Sep 9, 2019, 6:50 AM IST

இரண்டு வார கால வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சென்னை திரும்புகிறார்.

Tamil nadu CM Edappadi K.Palanisamy returns chennai tomorrow
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈருப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 அன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முதலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு லண்டன் சென்றது. அங்கே இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து செப்டம்பர் 1-ல் அமெரிக்கா சென்ற எடப்பாடி பழனிச்சாமி, நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் தமிழகத்துக்கு 2,780 கோடி ரூபாய் முதலீடும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் அரசு தெரிவித்தது.Tamil nadu CM Edappadi K.Palanisamy returns chennai tomorrow
பிறகு அமெரிக்காவின் சான் யூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இக்கூட்டத்தில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழகத்தில் உள்ள வசதிகள் பற்றியும் அரசு செய்துவரும் வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார். கடந்த இரு வார காலமாக வெளிநாடுகளில் மேற்கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் நிறைவு கட்டத்துக்கு வந்துவிட்டது.  பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாளை அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்ப உள்ளார்.Tamil nadu CM Edappadi K.Palanisamy returns chennai tomorrow
வெளி நாடு சுற்றுப்பயணம் பற்றியும் அங்கே கிடைத்த தொழில் முதலீடுகள் பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே முதல்வரின் சுற்றுப்பயணம் மூலம் ஈர்த்த முதலீடுகள், கிடைக்க உள்ள தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios