tamil nadu chief minister interview about cavery issue

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில் முடிவெடுத்தால் அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறிய மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்டிருந்தது.

கர்நாடக மே 12 முடிந்துள்ள நிலையில் மத்திய அரசு காவிரி வரைவு வாரியத்தை மத்திய அரசு நீர்வளத்துறை அமைச்சர் வீ.பீ சிங் இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இத்திட்டதின் நகல் கர்நாடாக, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய அரசுகளுக்கு வழங்கப்பட்டு காவிரி விவகாரம் மே 16 தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் காவிரி வழக்கில் மே 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து திருப்பதி செல்லும் முன் செய்தியாளர்களுக்கு இதனை முதல்வர் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியமும், நீர்பங்கீடு குழுவும் அமைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்