அனைத்திந்திய சித்த மருத்துவ மையத்தை தமிழகத்தில் சென்னையில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு   முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆங்கில சிகிச்சை ஒரு பக்கம் அளித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைக் கொடுத்தது. இதனால் தமிழக அரசும் மக்களும் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் பக்கம் சாய்ந்துள்ளனர். இதே போன்று டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு கசாயம் பட்டிதொட்டி முட்டு சந்து முதற்கொண்டு கொண்டு போய் சேர்த்தது சித்தமருத்துவமும் தன்னார்வலர் அமைப்புகளும் அதற்கு உறுதுணையாக இருந்தது அப்போததைய முதல்வர் ஜெயலலிதா. அவரின் சீரிய முயற்சியால் டெங்கு மரணங்கள் ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாத்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அனைத்திந்திய சித்த மருத்துவ மையத்தை தமிழகத்தில் சென்னை அருகே அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னை அருகே ரயில், சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அனைத்து கட்டமைப்புகளும் இங்கு இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.