வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது எப்படி  என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலக்த்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளது. அதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வடக்கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 3ம் வாரம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை குறித்தும், ஏரிகள், குளங்களை தூர் வாருதல், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இந்த ஆலோசனையின் போது பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை கையாள்வது,  துறை அலுவலர்களின் செயல் திறன்களை மேம்படுத்த அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,  பேரிடர் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடுகள், குறும்படங்கள் என பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.