தொகுதி மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து  திமுக தலைவர் ஸ்டாலின் புரடாவிட்டு வருகிறார்  என  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து விக்கிரவாண்டியில் உள்ள தும்பூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே அனைத்து குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அரசாக தமிழக அரசு உள்ளது. ஏழை எளிய மக்கள் பொருளாதார மேம்பாடு அடைய அதிமுக  ஆட்சி செய்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்திய அரசு  அதிமுக அரசு என்றும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நமது அரசு வழக்கும் தொடர்ந்து தற்போது அது நிலுவையில் உள்ளது. அதேவேலையில்  நீட் தேர்வு தமிழகத்திற்குவர காரணமாக இருந்தவர்கள் திமுகதான், ஆனால் அதை அதிமுக கொண்டு வந்தது போல திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக அதைச் செய்யும் இதைச்செய்யும் என்று மக்களிடம் ஸ்டாலின்  புரடா விட்டு வருகிறார். ஆனால் நம் அரசு புரடா விடுவதாக ஸ்டாலின் கூறுகிறார் என்றார்.  மக்களின் ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றி கடந்த தேர்தலில் திமுக வாக்கு பெற்றது. ஆனால் மக்கள் தற்போது அதை நன்கு புரிந்துகொண்டுள்ளனர் என்றார். 

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை ஏமாற்ற மனுக்களை வாங்கிக்கொண்டு இருக்கிறார், ஸ்டாலின்  ஏமாற்றவே பிறந்தவர் என கடுமையாக சாடினார், இப்படி மக்களை பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி புரடா விட்ட ஸ்டாலின் என்னை பார்த்து புரடா விடுவதாக சொல்கிறார், ஸ்டாலின்தான் புரடா பேர்வழி என்றார். தொடர்ந்து பேசிய அவர். தனக்கென்று வாழாமல் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், திமுகவினர் போட்ட பொய் வழக்கினால்தான்  மன உளச்சலடைந்து  மறைந்தார். அவரின் மறைவுக்கு முழு காரணமும் திமுகதான்.ஆனால் ஆடு நனைய ஒணான் அழுத கதையாக திமுகவினர் அரசியல் ஆதாயத்திற்காக அம்மாவின் மரணத்தைப்பற்றி பேசி மக்களை குழப்புகின்றனர் என்றார். அத்துடன் இந்தாண்டு டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் அப்போது அவர்  உறுதி அளித்தார்.