Asianet News TamilAsianet News Tamil

கலைவாணர் அரங்கில் இன்று கூடுகிறது சட்டப்பேரவைக் கூட்டம்... அதிரடி காட்ட தயாராகிறது திமுக..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது.

Tamil nadu Assembly session starts  in chennai kalaivanar arangam
Author
Chennai, First Published Sep 14, 2020, 8:42 AM IST

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்கிற விதி உள்ளது. அதன்படி தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடி உள்ளதால், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால், கலைவாணர் அரங்கத்துக்கு சட்டப்பேரவை கூட்டத் தொடர் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் 3 நாட்கள் மட்டுமே இக்கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.Tamil nadu Assembly session starts  in chennai kalaivanar arangam
இக்கூட்டத் தொடரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்குவது தொடர்பாக சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் முக்கிய பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக இருபதுக்கும் மேற்பட்ட பிரச்னைகளைப் பட்டியலிட்டு, அது குறித்து பேரவையில் பேசுவதற்கு சபாநாயகர் தனபாலிடம் கவனஈர்ப்பு தீர்மானங்களை திமுக அளித்துள்ளது.Tamil nadu Assembly session starts  in chennai kalaivanar arangam
கொரோனா பாதிப்புகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. பொருளாதார இழப்புகள், மக்களின் வாழ்வாதார இழப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளன. புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு தற்கொலைகள், கிசான் திட்ட முறைகேடு,  அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளன. கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெறுவதால் மருத்துவ முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு 2 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios