Asianet News TamilAsianet News Tamil

BREAKING எடப்பாடியில் இபிஎஸ், போடியில் ஓபிஎஸ் போட்டி... வெளியானது அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.  

Tamil Nadu assembly elections... AIADMK releases the first list of six candidates
Author
Tamil Nadu, First Published Mar 5, 2021, 2:10 PM IST

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும், போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் போட்டியிட உள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் என ஒருபுறமும், விருப்ப மனு தாக்கல், நேர்காணல், ஆலோசனை என மறுபுறமும் பிசியாக வேலை செய்து கொண்டு வருகின்றன. அதிமுகவில் கடந்த மார்ச் 3ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. 

Tamil Nadu assembly elections... AIADMK releases the first list of six candidates

தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருப்பதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நேர்காணலை நடத்தி முடித்து சாதனை படைத்தனர். இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் முதற்கட்டமாக அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.அதில் போடிநாயக்கனுர் - ஓபிஎஸ், எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் - சி.வி.சண்முகம், ராயபுரம் - ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை - தேன்மொழி என பட்டியல் வெளியாகியுள்ளது.

Tamil Nadu assembly elections... AIADMK releases the first list of six candidates

Tamil Nadu assembly elections... AIADMK releases the first list of six candidates

Follow Us:
Download App:
  • android
  • ios