Asianet News TamilAsianet News Tamil

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. ஆரம்பத்திலேயே அடிச்சு தூக்கும் திமுக... பின்தங்கும் அதிமுக..!

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி திமுக கூட்டணி 22 இடங்களிலும், அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Tamil Nadu Assembly election results .. DMK lead
Author
Tamil Nadu, First Published May 2, 2021, 8:50 AM IST

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி திமுக கூட்டணி 22 இடங்களிலும், அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தலைமையில் பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் என 5 அணிகள், தேர்தல் களத்தை சந்தித்தது.

Tamil Nadu Assembly election results .. DMK lead

அதில் திமுக, அதிமுகவுக்கு மட்டுமே நேரடி போட்டி நிலவியது. 3வது இடத்தைப் பிடிக்கத்தான் மற்ற 3 கட்சிகளும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.தமிழகத்தில் 234 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை சரியாக காலை 8 மணிக்கு 75 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. 

Tamil Nadu Assembly election results .. DMK lead

இந்நிலையில், தற்போது, நிலவரப்படி திமுக கூட்டணி  22 இடங்களிலும், அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா, ஈரோடு மேற்கு, அண்ணாநகர், கூடலூர், உதகை, குன்னூர், ஆண்டிப்பட்டி, பெருந்துறை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் திமுக கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், அதிமுக கூட்டணியினர் கடலூர், கும்பகோணம், ஆரணி, மொடக்குறிச்சி உள்ளிட்ட 9  இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios