Asianet News TamilAsianet News Tamil

அ.தி.மு.க வசமாகும் தேர்தல் களம்

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றால் அ.தி.மு.கவிற்கு மக்களிடயே ஆதரவு பெருகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த நிலைமை முற்றிலும் மாறி தமிழக மக்கள் அ.தி.மு.கவை ஆதரிக்க தயாராக இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

 

tamil nadu assembly election field favor for admk says field reports
Author
Chennai, First Published Feb 2, 2021, 10:36 AM IST

ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இறுதியாக, கடந்த 2019 அக்டோபர் மாதம் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. ஆட்சியை ஒரு பக்கம் பார்த்துக் கொண்டு அதே சமயம் கட்சியையும் ஒன்றிணைத்து நடத்தி எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்ற தேர்தலின் போது நிலவிய சூழல் தற்போது முற்றிலுமாக மாறியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, கொரோனா காலத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு தொற்று பரவலை கட்டுப்படுத்தியது, கொரோனா காலத்தில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கே சென்று கொடுத்தது போன்ற திட்டங்களே காரணம்.

திட்டங்கள்:

கொரோனோ காலத்தில் தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் இலவச அரிசியை வழங்கியது. நாட்டில் எந்த மாநிலமும் செய்யாத வகையில் டிசம்பர் மாதம் வரை இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கே சென்று கொடுத்தது தமிழக அரசு. இதனால் கொரோனா காலத்திலும் மக்கள் தங்களது வாழ்வாதரங்கள் பாதிக்காமல் பார்த்துக் கொண்டது தமிழக அரசு. 

tamil nadu assembly election field favor for admk says field reports

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்து அதனை செயல்படுத்தியும் உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மருத்துவக் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்தார். 

நிவர் மற்றும் புரவி போன்ற புயல்கள் மற்றும் ஜனவரி மாத மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உத்திரவிட்டதோடு, ஏக்கருக்கான உச்ச வரம்பையும் தளர்த்தியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பொங்கல் பண்டிகையை அனைத்து தரபினரும் கொண்டாடும் விதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம் கொடுத்தது அனைவரின் வரவேற்பையும் பெற்றது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க ஏதுவாக இலவசமாக 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். தைப்பூச தினத்தன்று விடுமுறை அளித்தது என அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இப்படி, சாமானியர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கு வேண்டிய திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சரின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதாலும் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்களின் எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்த மக்களில் ஒருவராகவும் அதேசமயம் அரசியல் நகர்வுகளை சாதுர்யமாக நடத்தி அரசியல் சாணக்கியனாகவும் வலம் வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால் தேர்தல் களம் தற்போது அ.தி.மு.கவிற்கு சாதாகமாக மாறியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios