தேர்தல் செலவுகளுக்கு கட்சித் தலைமை கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று யாரோ கொளுத்திப் போட நாம் தமிழர் வேட்பாளர்கள் வரிசையாக சீமான் வீட்டு கதவை தட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்து வேட்பாளர்களையும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டார் சீமான். சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். பல தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என அடையாளம் காட்டப்பட்டுவிட்டனர். அவர்கள் எல்லாம் கடந்த சில நாட்களாகவே தேர்தல் பணிகளை தொடங்கி செய்து வருகின்றனர். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்னர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் தலைமையக நிர்வாகிகள் சிலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர்.

இதற்கு காரணம் கட்சியின் வரவு செலவு விவரங்களை அவர்கள் கேட்டது தான் என்று கூறப்பட்டது. மேலும் கட்சிக்கான நிதி விவரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் செலவு விவரங்களும் கூட ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிருப்தியாளர்கள் கூறினர். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு வரும் நன்கொடை, செலவு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக கட்சிக்கள் பெரிய விவாதம் நடைபெற்றது. அப்போது நன்கொடை எதற்கு வாங்கப்படுகிறது என்கிற கேள்வி எழுந்த போது மூத்த நிர்வாகி ஒருவர் தேர்தல் செலவுக்கு என்று கூறியதாக சொல்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ பதிவு ஒன்றை சீமான் அதிருப்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் முக் கிய நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு அனுப்பி வைத்து தேர்தல் செலவுக்காக நன்கொடை பெறுவதாக கூறியுள்ள நிலையில் உங்களுக்கு இதுவரை தேர்தல் செலவுக்கு என்று எவ்வளவு தொகை வந்துள்ளது என்று தூண்டிவிட்டிருப்பதாக கூறுகிறார்கள். அதே சமயம் அப்பாவிகள் சிலரோ தேர்தல் செலவுக்கு என்று தலைமையகத்தில் இருந்து கணிசமான அளவில் நிதி வரும் என்று நம்ப ஆரம்பித்துள்ளனர். சிலர் ஒரு படி மேலே சென்று தேர்தல் செலவுக்கு பணம் எப்போது வரும் என்று கட்சித் தலைமைக்கு போன் போட ஆரம்பித்துள்ளனர்.

இன்னும் சில நிர்வாகிகளோ வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு பணம் கேட்கிறார்கள் என்று சீமான் வீட்டு கதவை தட்டி சம்பவங்களை எடுத்துக் கூற சீமான் கடும் கோபம் அடைந்துள்ளதாக சொல்கிறார்கள். கட்சி நடத்ததே நன்கொடை பத்தவில்லை இதில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் செலவுக்கு கொடுக்க பணம் யாரிடம் இருக்கிறது என்று முகம் சிவந்துள்ளார் சீமான். மேலும் இப்படி கட்சிக்காரர்கள் இடையே தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் அதிருப்தியாளர்கள் மீது கோபம் கோபம் அடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.

கட்சியை விட்டு சென்ற பிறகு நம் கட்சிக்குள் எதற்கு தேவையில்லாமல் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சீமான் ஆதங்கத்தில் உள்ளார். ஆனால் சீமானை நிதானம் இழக்கச் செய்ய வேண்டும் என்றால் கட்சி நிதி, வரவு செலவு தொடர்பாக நிர்வாகிகளை வைத்து கேள்வி கேட்க வைத்தால் போதும் என்று அதிருப்தியாளர்கள் தொடர்ந்து அதே வேலையில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள்.