ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கும், கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

இதைதொடர்ந்து இன்று அவர்களது திருமணம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார்நகரை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான சந்தியாவிற்கும் கடந்த 2 மாதங்களுக்கும் முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு செப்டம்பர் 12-ம் தேதி பண்ணாரிஅம்மன் கோயிலில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் முன்னிலையில் திருமணம் என அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு கட்சியினருக்கும், உறவினர்களுக்கும் எம்எல்ஏ ஈஸ்வரன் அழைப்பிதழ் கொடுத்து வந்த நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மணப்பெண் சந்தியா மாயமானார். 

இதனால் அந்த திருமணம் நின்றது. இதுகுறித்து அவரது தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் மணப்பாறையில் தோழி வீட்டில் தங்கியிருந்த சந்தியாவை அழைத்துவந்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதியிடம் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறினார். இதையடுத்து நீதிபதி சந்தியாவை பெற்றோருடன் அனுப்பி வைத்தார். 

இந்நிலையில் எம்எல்ஏ ஈஸ்வரன்  செப்டம்பர் 12-ம் தேதி வேறு பெண்ணுடன் திருமணம் செய்யவேண்டும் என முடிவெடுத்து தனது ஆதரவாளர்களை தீவிரமாக பெண்தேடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு, அவரது உறவினர் பெண்ணுடன், இதே தேதியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று நடக்க இருந்த திருமணமும், திடீரென நின்றது. இதனால், தடபுடலாக இருந்த அப்பகுதி சோகமயமாக காட்சியளித்தது. திருமணம் நிறுத்தப்பட்டுள்ள தகவல் தொகுதி மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.