தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன். இவருக்கு  திடீரென நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட ஞானதேசிகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்  என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.