1900% வாகன அபராத கட்டணம் உயர்வு..! முழுமையாக கை விட வேண்டும்..! தமிழக அரசை வலியுறுத்தும் கே.பாலகிருஷ்ணன்

அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் அபராதமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை 400 % முதல் 1900 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன். மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Tamil K Balakrishnan has insisted that the increased vehicle fine fee should be completely waived in Tamil Nadu

அபராத கட்டணம் உயர்வு

சென்னை மாநகர காவல்துறையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அமலுக்கு வந்தது. அதன் படி செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், ரூ.1000 அபராதமும், இரண்டாவது அதேபோல ஈடுபடுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, சிக்னலை மதிக்காமல் செல்வோருக்கு 2வது முறை ரூ.1500ம், மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்களில் ஈடுபடுவோருக்கு 2வது முறை ரூ.10 ஆயிரம்,

Tamil K Balakrishnan has insisted that the increased vehicle fine fee should be completely waived in Tamil Nadu

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோருக்கு 2வது முறை ரூ.1500ம்,  ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் என திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சில இடங்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடவும் செய்தனர்.

Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

Tamil K Balakrishnan has insisted that the increased vehicle fine fee should be completely waived in Tamil Nadu


அபராத கட்டணம்- கை விட கோரிக்கை

இந்தநிலையில் வாகன சட்டத்தின் மூலம் அபராத தொகை வசூலிக்கப்படுவதற்கு மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால்  அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் அபராதமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை 400 % முதல் 1900 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவாக மேற்கொள்வதுடன், கூடுதலான தன்னார்வலர்களை இப்பணிகளில் ஈடுபடுத்த  வேண்டும்.

 

அதேபோல  தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விபத்து - உயிரிழப்பு விகிதங்களை குறைக்க‌வும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே, மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பள்ளி கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும்... அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios