Asianet News TamilAsianet News Tamil

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுங்கள்.. மாநில அரசுக்கு நீதி மன்றம் அறிவுரை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 460 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Take action to identify and rehabilitate mentally ill people .. Court advice to the state government.
Author
Chennai, First Published Sep 7, 2021, 1:48 PM IST

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர் கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் சீர் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

Take action to identify and rehabilitate mentally ill people .. Court advice to the state government.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 460 மனநலம் பாதிக்கப்பட் டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் மூலம், 45 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Take action to identify and rehabilitate mentally ill people .. Court advice to the state government.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios