Asianet News TamilAsianet News Tamil

#JaiBhim Issue | நடிகர் சூர்யாவை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் ; அன்புமணிக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் !

 

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்து பாமக அன்புமணி ராமதாசுக்கு கடிதம். 

 

t rajendhar support to surya in jaibhim movie issue
Author
Tamil Nadu, First Published Nov 16, 2021, 12:19 PM IST

 

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்ததனர்.படத்தில் வரும் காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜெய்பீம் திரைப்படத்தால், குறிப்பிட்ட சமுதாயம் வேதனையும், கொந்தளிப்பும் அடைந்துள்ளதாக கூறி, நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

t rajendhar support to surya in jaibhim movie issue

பாமகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.’ஜெய்பீம்’ படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி, நடிகர் சூர்யா, ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பல்வேறு விதங்களில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

t rajendhar support to surya in jaibhim movie issue

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்  ‘WeStandWithSuriya’ மற்றும்  #பணம்பறிக்கும்_பாமக என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இயக்குனர் வெங்கட் பிரபு,பா.ரஞ்சித்,நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.தமிழ்நாடு  இந்நிலையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளது. டி .ராஜேந்தர் கௌவரவ ஆலோசகராகவும், உஷா டி .ராஜேந்தர் தலைவராகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தவறான காட்சி இருப்பதாக கூறி இருந்ததால், அந்த காட்சி உடனே படக்குழுவினரால் நீக்கப்பட்டது. 

t rajendhar support to surya in jaibhim movie issue

அந்த முத்திரை இடம்பெற்றதற்கு சூர்யாவுக்கு சம்பந்தம் இல்லை.இதனால் உங்கள் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.இது நியாயம் இல்லை.இந்த செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அரசியல்,ஜாதி,மத,இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு கல்வி பணியாற்றும் சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios