And if I am participating in the fight neduvasal main reason for the problem it is because the soil Tanjore
நெடுவாசல் பிரச்சனைக்காக நான் போராட்டத்தில் பங்கேற்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம், அது தஞ்சை மண் என்பதால் தான் நான் தஞ்சை தண்ணீரை குடித்து வளர்ந்தவன் என்று இயக்குநர் டி,ராஜேந்தர் ஆவேசத்துடன் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி வழியாக சென்றார்.
திருச்சி விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ஊடகங்களில் நான் அளித்த பேட்டியை ஒளிபரப்பும், நடிகர் டி.ராஜேந்தர் என போடுகிறார்கள்…நான் நடிகனா இல்லை..தலைவர்…லட்சிய திமுக கட்சியின் தலைவர்…இனிமேல் அப்படித்தான் போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூடங்குளத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழகமே கலந்த கொண்டது. ஆனால் நான் கலந்து கொள்ளவில்லை..
ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் நான் ஏன் கலந்து கொள்கிறேன் தெரியுமா ? என கேள்வி எழுப்பிய அவர் இது தஞ்சை மண்…தஞ்சை தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என தெரிவித்தார்..

அப்போது ஒரு செய்தியாளர் கூடங்குளத்தில் இருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆவேசமடைந்த டி.ராஜேந்தர், நான் தமிழர்கள் பிரச்சனைக்கு மட்டும் தான் போராடுவேன் என உளரிக்கொட்டினார்…கூடங்குளத்தில் தொடக்கத்திலேயே அணுஉலை வராமல் தடுத்திருக்க வேண்டும்..எல்லாம் முடிந்த பிறகு எப்படி போராடுவது என்றும் பேசினார்.
