Udhayanidhi : நேரம், காலம் பார்த்து உதயநிதி பதவி ஏற்பது ஏன்?? பாஜகவினரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த TKS

பதவி ஏற்பது நல்ல நேரம் என்பது அல்ல ஆளுநர் அளித்த நேரத்தில் தான் உதயநிதி பதவியேற்றுக்கொண்டுள்ளதாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

T K S Elangovan has explained why Udhayanidhi Stalin became a minister in good time

பெரியார் கொள்கைகள் அழிந்து போய்விட்டதா.?

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுகொண்டார். அவரது பதவியேற்பை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். வாரிசு அரசியல் என்றும் நேரம் காலம் பார்த்து பதவியேற்பதாக கூறியிருந்தனர். உண்மையிலேயே உதயநிதி ஸ்டாலின் ஈ.வெ.ரா கொள்கையை ஏற்பவராக இருந்தால்,  காலை 7:30-9:00 மணிக்குள் அல்லது மதியம் 12:1:30 மணிக்குள் அமை‌ச்ச‌ர் பத‌வியேற்கட்டும். இல்லையேல், ஈ.வெ.ரா கொள்கைகள் அழிந்து போயிற்று என ஒப்புக் கொள்ளட்டும் என பாஜக துணை தலைவர்  நாராயணன் திருப்பதி தெரிவித்து இருந்தார். 

T K S Elangovan has explained why Udhayanidhi Stalin became a minister in good time

சுபமுகூர்த்த நாளில் பதவியேற்பு

இதே போல நடிகை கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், டிசம்பர் 14-ம் தேதி சுபமுகூர்த்த நாள். காலை 9.30 மணி மிகச் சிறந்த மங்களகரமான நேரம். அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்துத் தொடங்குவதே பகுத்தறிவு' என விமர்சனம் செய்துள்ளார். இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டிகேஎஸ் இளங்கோவன் பதில் அளித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று காலை பதவியேற்ற நிலையில், நல்ல நேரம், காலம் பார்த்து பதவியேற்றதாக பாஜகவினர் விமர்சித்து வரவதற்கு திமுக மூத்த நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் பதில் அளித்துள்ளார். நாங்கள் சமத்துவ சிந்தனையாளர்கள் , ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கூற்றுப்படி மக்கள் சமத்துவத்திற்காக ஆட்சி நடத்துபவர்கள்,  பதவி ஏற்பது நல்ல நேரம் என்பது அல்ல ஆளுநர் அளித்த நேரம் என தெரிவித்துள்ளார்.

T K S Elangovan has explained why Udhayanidhi Stalin became a minister in good time

திமுகவிற்கு வெற்றி மேல் வெற்றி!

மேலும் தமிழகம் முழுவதும் திமுக வெற்றிக்காக பாடுபட்டவர்கள, திமுக கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர், எனவே எடப்பாடி பழனிசாமி தான் பதவி ஏற்கும் போது முடிசூட்டு விழா என சொல்வாரா ? என கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி அரசியலில் காலடி எடுத்து வைத்த நேரம் முதல் திமுகவிற்கு வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளதாக கூறினார்.

இதையும் படியுங்கள்

அடுத்தவன் என்றால் சனாதனம் மூடநம்பிக்கை! தனக்குனா சுபமுகூர்த்தம் நல்ல நேரம்! உதயநிதியை வச்சு செய்யும் கஸ்தூரி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios