Asianet News TamilAsianet News Tamil

கறுப்பு பணத்தை பதுக்கியவர்களை போட்டுக்கொடுத்தது சுவிஸ் அரசு... சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்களின் ஜாதகம் மோடி கையில்!

2018-ம் ஆண்டு வரையில் சுவிஸ் வங்கிகளில் பராமரிக்கப்பட்ட கணக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக  தகவல்கள்  தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டில் ஏராளமான கணக்குகளைப் பலர் முடித்துக்கொண்டுள்ளனர். ஆனால், வழங்கப்பட்டுள்ள விவரங்களில் ஒருமுறை பணம் செலுத்தியவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

Swiss government gave lists to indian government who have maintained bank account in swiss bank
Author
Delhi, First Published Sep 9, 2019, 6:32 AM IST

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தைப் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு சுவிஸ் வங்கி அளித்துள்ளது. Swiss government gave lists to indian government who have maintained bank account in swiss bank
உலக அளவில் பிரபலமான சுவிஸ் வங்கியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அரசுக்குக் கணக்குக் காட்டாத பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைப்பதில் சுவிஸ் வங்கிகளே முன்னிலையில் இருந்துவருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வரி ஏய்ப்பு செய்வோர் ஆகியோர் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து பணத்து பதுக்கியுள்ளனர்.

 Swiss government gave lists to indian government who have maintained bank account in swiss bank
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தரக்கோரி நீண்ட நாட்களாக மத்திய அரசு அந்நாட்டு அதிகாரிகளுடன் மத்திய அரசின் நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். தற்போது சுவிட்சர்லாந்து அரசுக்கும் இந்திய அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களி விவரங்களை அளிக்க அந்நாட்டு அரசு  முடிவு செய்தது.

 Swiss government gave lists to indian government who have maintained bank account in swiss bank
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் எப்போது கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில் கறுப்பு பணத்தை பதுக்கிய இந்தியர்களின் விவரங்களை சுவிஸ் வங்கி செப்டம்பர் 1 அன்று வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், எதிர்பார்த்ததுபோல் அன்று விவரங்கள் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் முதல் கட்டமாக சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை மத்திய அரசுக்கு சுவிஸ் அரசு வழங்கியிருக்கிறது.  Swiss government gave lists to indian government who have maintained bank account in swiss bank
2018-ம் ஆண்டு வரையில் சுவிஸ் வங்கிகளில் பராமரிக்கப்பட்ட கணக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக  தகவல்கள்  தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டில் ஏராளமான கணக்குகளைப் பலர் முடித்துக்கொண்டுள்ளனர். ஆனால், வழங்கப்பட்டுள்ள விவரங்களில் ஒருமுறை பணம் செலுத்தியவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் யார் என்று விவரங்கள் முழுமையாகத் தெரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 
இதற்கிடையே சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பெரும்பாலானோர் ஆசிய பசிபிக் நாடுகளில் வசித்துவருவதாகவும் இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios