s.v.sekar will arrest by the police it is not my duty told pon.radha krishnan

பொது நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் எஸ்.வி.சேகர் தான் சந்தித்தாகவும், அவர் தேடப்படும் குற்றவாளி என்றாலும், அவரை அரெஸ்ட் பண்ணவேண்டியது போலீசார் வேலை…என் வேலை அல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் உத்தரவிட்டார். அதோடு, எஸ்.வி.கேகர் கருத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

எஸ்.வி.சேகர், கடந்த 24 நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவாரா என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற உத்தரவை தலைவணங்கி நிறைவேற்றுவது அரசின் கடமை. எனவே எஸ்.வி.சேகர் மீது நீதிமன்ற வலியுறுத்தும் நடவடிக்கைகளை நிச்சயம் அரசு மேற்கொள்ளும் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சி ஒன்றில் எஸ்.வி.சேகர். கலந்து கொண்டார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவல் துறை வேண்டுமென்றேதான் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்று பெண் நிருபர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு உயர்மட்ட செல்வாக்கால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.விசேகரை சந்தித்தேன், பேசினேன்,,, அவர் தேடப்படும் குற்றவாளி என்று எனக்கு நன்றாகத் தெரியும்… ஆனால் அவரை அரெஸ்ட் பண்ண வேண்டியது போலீசோட வேலை…என் வேலை அல்ல என தெரிவித்தார்.