Asianet News TamilAsianet News Tamil

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த எஸ்.வி.சேகர்... ப்ளாஸ்மாவுக்கு பாராட்டு..!

கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க ப்ளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளதாக இஸ்லாமியர்கள் அறிவித்துள்ளதற்கு பாஜக ஆதரவாளரும், நடிகருமான் எஸ்.வி.சேகர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

SV Sekhar jumps in support of Islamists
Author
Tamil Nadu, First Published Apr 21, 2020, 2:50 PM IST

கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க ப்ளாஸ்மா தானம் செய்ய தயாராக உள்ளதாக இஸ்லாமியர்கள் அறிவித்துள்ளதற்கு பாஜக ஆதரவாளரும், நடிகருமான் எஸ்.வி.சேகர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

SV Sekhar jumps in support of Islamists

கொரோனா பாதித்து குணமடைந்த நபரிடமிருந்து ப்ளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நபருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தப்லீக் மாநாட்டில் பங்கேற்று பின்னர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக வீடு திரும்பியவர்களின் இரத்தத்தில் உள்ள ப்ளாஸ்மா திரவம் தான் தற்போது நோயாளிகளை குணப்படுத்த போகிறது.  ஆகவே கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க ப்ளாஸ்மா தானம் செய்ய நாங்கள் தயார் என கொரொனா நோயிலிருந்து குணம் பெற்றவர் நெகிழ வைக்கும் அறிவிப்பை வெளியிட்டனர். இந்திய தொப்புள் கொடி சமுதாயத்தை காக்க நாங்க அரசு அனுமதித்தால் ரத்த ப்ளாஸ்மா தரத் தயாராக உள்ளோம் எனவும் அறிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.வி.சேகர், ‘’கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை.'’எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios