sv sekar against speech about kamalahasan

எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காது எனவும் கமல் மின்சாரப்பெட்டியில் கை வைப்பது போல் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடுகிறார் எனவும் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வருகின்றார். அதில் கேரள் முதல்வர் பினராயி விஜயன் இந்துதுவ சக்திகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய கமல், இத்தகைய இந்து பிரிவினர் முன்பெல்லாம் வன்முறையில் ஈடுபடாமல் வாதங்களின் மூலமே எதிர்ப்பை தெரிவித்தனர் எனவும் தற்போது அவர்களால் இந்து தீவிரவாதியை காட்டுங்கள் என கேட்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். 

இதற்கு பாஜக, சிவசேன உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கமல் மீது உ.பியில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் தீவிர விசுவாசியும் நடிகருமான எஸ்.வி.சேகர், கமல் குழப்பத்தில் இருப்பதாகவும் அவரை அறிவாளி என்று நினைத்தேன் எனவும் தெரிவித்தார். 

இந்து தீவிரவாதம் என்ற தவறான கற்பித்தல் அவருக்கு இருப்பதாகவும் அடிக்கடி கேரளாவை புகழும் கமல் அங்கேயே போய் வாழட்டும் எனவும் குறிப்பிட்டார். 

எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம் என்பவர்களுக்கு இந்து மதம் பிடிக்காது எனவும் கமல் மின்சாரப்பெட்டியில் கை வைப்பது போல் தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடுகிறார் எனவும் தெரிவித்தார். 

சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுவதில் தவறில்லை எனவும் பெரும்பான்மையினருக்கு எதிராக பேசக்கூடாது எனவும் எஸ்வி சேகர் வலியுறுத்தியுள்ளார்.