Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார் ! மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது !!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் இன்று இரவு  11 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67.
 

Sushma swaraj expired due to heart attack
Author
Delhi, First Published Aug 6, 2019, 11:38 PM IST

பாஜக தலைவர்களில் மிக முக்ககியமானவர் என்று கருதப்படுப்வர் சுஷ்மா ஸ்வராஜ். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி முதல் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

இந்தியாவின் 15 ஆவது மக்களவையுன் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். மேலும் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Sushma swaraj expired due to heart attack

பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தின் போது மக்களவையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஜ்நாத்சிங்கும் அவருடன் சென்றிருந்ததால் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி  முதல் நவம்பர் 23 ஆம் தேதி வரை இந்தியாவின் பொறுப்பு பிரதமராகவும் சுஷ்மா  பதவி வகித்தார்.

கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்நது அவர் உடல்நலம் குன்றிய நிலையிலேயே இருந்ததால் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

Sushma swaraj expired due to heart attack

தற்போது உடல் நலக்குறைவு காரணமாக  சுஷ்மா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயில் பிரிந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios