Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெறும், 80 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட சமீபத்திய மெகா சர்வே முடிவுகள்!

தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜனநாயக கூடமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்து கனிப்புகள் தெரிவிக்கின்றன,

survey reveals admk will come into power again in tamil nadu
Author
Chennai, First Published Mar 21, 2021, 6:58 PM IST

தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜனநாயக கூடமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்து கனிப்புகள் தெரிவிக்கின்றன, 

தி.மு.க கூட்டணி 111 இடங்களை பெறும் என்றும் அ.ம.மு.க ஒரு இடத்தை பெறும் என்றும் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் நடைபெற்றுள்ள திட்டங்களும் தொண்டை மண்டலத்தில் கூட்டணி கட்சிகளின் பலமும் அ.தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்க உதவியுள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. 

ஜனநாயக கூடமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் என்ற தன்னார்வ அமைப்பு 2011 முதல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2016ம் ஆண்டு கருத்து கணிப்புகளை துல்லியமாக வெளியிட்டதன் மூலம் இந்த அமைப்பின் கருத்து கணிப்பு முடிவுகளை  தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் அமைப்பு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய கருத்து 

கணிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. சர்வே முடிவுகள் மண்டலங்கள் வாரியாக தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது. இதன்படி, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி 40 இடங்களிலும் தி.மு.க கூட்டணி 28  இடங்களை கைப்பற்றும் என்றும், தொண்டை மண்டலத்தில் அதாவது தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் 34 தொகுதிகளை அ.தி.மு.க கூட்டணியும் 24 இடங்களை தி.மு.க கூட்டணியும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

survey reveals admk will come into power again in tamil nadu

திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட சோழ மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி 20 இடங்களையும் தி.மு.க கூட்டணி 21 இடங்களையும் கைப்பற்றும் என்றும் அதே சமயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களான பாண்டிய மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி 20 இடங்களையும் தி.மு.க கூட்டணி 26 இடங்களையும் கைப்பற்றும் என்றும் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. மொத்தமாக அ.தி.மு.க 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. தி.மு.க தென் தமிழக மாவட்டங்களில் அதிக தொகுதிகளை பெற்று 111 இடங்களை கைப்பற்றும் என்றும் இந்த சர்வே தெரிவிக்கிறது. 

கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  மக்கள் விவசாயியாக பார்ப்பதும் அ.தி.மு.க கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்று தருவதாக அமைந்துள்ளது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரண உதவித் தொகை, நூறு நாள் வேலை திட்டத்தின் நாட்கள் அதிகரித்தது ஆகியவை மக்களால் பெரிதும் பராட்டப்படுகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மக்க  ளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு மற்றும் தேவேந்திரகுலவேளார் என்ற பெயர் மாற்றம் ஆகியவை அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. சர்வேயின் போது கேட்கப்பட்ட கேள்விகளில் பொதுமக்கள், ஜெயலலிதா இறந்த சமயம், கொரோனா தொற்று சமயத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புதிய வேலை வாய்புகளை உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை பாராட்டி கருத்துகளை தெரிவித்துள்ளனர். இது அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றி வாகை சூட வழி ஏற்படுத்தி தந்துள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றது.  

survey reveals admk will come into power again in tamil nadu

 கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் தி.மு.கவிற்கான நிரந்தர வாக்கு வங்கிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பது பலமாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் போல் இல்லாமல் தற்போது தி.மு.க கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் தோல்விகளை சந்திக்கும் நிலை உள்ளது, இது தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வரவு தி.மு.க கூட்டணியின் வாக்குகளை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை தி.மு.கவிற்கு செல்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு செல்கிறது. இது தவிர தி.மு.கவின் நிரந்த வாக்கு வங்கியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறித்துள்ளதை இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 

தேர்தலுக்கு முந்தைய இந்த கருத்து கணிப்பு அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் அ.தி.மு.க கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதில் முன்னிலையில் உள்ளதை சுட்டிக் காட்டுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios