தமிழகத்தில் ஆட்சி மாற்றமா..? என்ன சொல்கிறது கருத்துக்கணிப்பு..! 
 
தமிழகத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்படும் சூழல் உருவாகும். இந்த 22 தொகுதிகளை பொறுத்தவரையில் 18 தொகுதியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இந்த 18 சட்ட மன்ற தொகுதி மற்றும் கனகராஜ், கருணாநிதி மறைந்ததால் 2 தொகுதி மற்றும் மற்ற 2 தொகுதியும் சேர்த்து 22 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அமமுக- காவில் இருப்பதால் அவர்களும் வெற்றி பெற வேண்டும் என முழு முனைப்போடு அரசியல் களத்தில் இறங்கி உள்ளனர். அதேபோன்று ஆளும் அதிமுக வும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டு வருகிறது. 

இடைத்தேர்தலில் 22 தொகுத்தலில்அமோக வெற்றி பெற்று எடப்பாடி ஆட்சியை வீழ்த்த திமுக வும் சலிக்காமல் இரவு பகலாக பிரச்சாரத்தில் இறங்கி மாற்றத்தை நோக்கி பயணம் செய்தனர். ஆக மொத்தத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் மட்டும் ஆட்சியை அதிமுக தக்க வைத்துக்கொள்ளுமா ..? அல்லது திமுகவிற்கு தாரை வார்க்குமா என்பதை கூற முடியும்.