பொதுச் சொத்து பாதுகாப்பு சட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி சரணடைய முடிவு செய்துள்ளார்.
பொதுச் சொத்து பாதுகாப்பு சட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி சரணடைய முடிவு செய்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு நீதிமன்றம் அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பொதுச்சொத்து சேத வழக்கின் தீப்பை தடை செய்ய வேண்டும் என நேற்று உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்கச்சொன்னால் சரி, தீர்ப்பையே ஏன் நிறுத்தி வைக்க வேண்டும். அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச் செல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டும் எனவே கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தடை செய்ய முடியாது’’ என நீதிபதிகள் மறுத்தனர்.
இந்நிலையில், அவர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளார். சரணடைந்த பிறகு அவர் ஜாமீன் கோர உள்ளார். இதற்காக நீதிமன்ற வளாகத்தில் அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ண ரெட்டி. இவர் கடந்த 1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டு இருந்தனர். இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிபோனது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 12, 2019, 11:05 AM IST