supreme court verdict on cauvery water dispute
தமிழகத்திற்கு 193 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும் என 2007ல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அந்த நீரின் அளவை 177.25 டிஎம்சியாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரியது. அதேவேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசு முன்வைத்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, காவிரி மேல்முறையீட்டு வழக்கை வாரத்தில் 3 நாட்கள் வீதம் தினமும் வேகமாக விசாரித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காவிரி நீருக்கு கர்நாடகா உரிமை கோரிவந்த நிலையில், காவிரி நீருக்கு எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் 20 டிஎம்சி அளவிற்கு நிலத்தடி நீர் இருப்பதால் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் கூறியிருந்த நிலையில், 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
