Supreme Court to honor the federal government
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதம் மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னை அருகே குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதில் நளினி, பேரறிவாளன்,சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்ச நீதிமன்றம்.
தமிழக அரசு முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய முடிவெடுத்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த நகழை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது.
ஆனால் மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசை எதிர்த்து மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பது பற்றி 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
