Asianet News TamilAsianet News Tamil

எஸ்.வி சேகருக்கு சிக்கல்…! எந்நேரமும் கைது செய்யப்படலாம்

supreme court reject jameen plea for sv sekar
supreme court reject jameen plea for sv sekar
Author
First Published Jun 1, 2018, 1:41 PM IST


சினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும்,பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பகிர்ந்திருந்த ஆபாச கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், திருமலை சடகோபன் என்பவர் எழுதியிருந்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசப்பட்டிருந்தது.

அந்த பதிவு தொடர்பான சர்ச்சை எழுந்ததும் திருமலை சடகோபன் தன் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிவிட்டார். எஸ்.வி.சேகரும் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இருந்தபோதும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்கள் தற்போது சமூகவலைதளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன.

supreme court reject jameen plea for sv sekar

எஸ்.வி. சேகர் பகிர்ந்திருக்கும் இந்தப் பதிவை எழுதியிருக்கும் திருமலை சடகோபன், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். சர்ச்சை பெரிதானதும் தனது பக்கத்தை பிறர் பார்க்காத வண்ணம் முடக்கியுள்ளார். அவர் தன்னுடைய பதிவில், தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் புகார் அளித்தார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும் என்றும் எச். ராஜாவும், எஸ்வி சேகரும், ’சைபர் சைக்கோக்கள்’ என்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்திற்கே ஆபத்து எனவும் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

supreme court reject jameen plea for sv sekar

இந்நிலையில் இவர் பல சென்னை உயர்நீதிமன்றம், கோடைக்கால நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் என பலவாறு ஜாமீன் கோரி வந்துள்ள நிலையில் இறுதியாக உச்சநீதிமன்றமும் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்திரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறை எப்போது வேண்டுமானாலும் கைது பண்ணலாம் ஆனால் தலைமை செயலாளாராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் இவரின் அண்ணி என்பதால் நடவடிக்கை எடுக்குமா? எனச் சந்தேகமாக உள்ளதென பலரும் கூறிவருகின்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios