தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு தடை விதித்தது. தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
வேதாந்தாவின் கோரிக்கையை ஏற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் மூன்று வாரங்களில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தமிழக அரசின் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சம்பு கல்லோலிகர் வேதாந்தா நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மேல்முறையீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதனால் ஆலையின் செயல்பாட்டுக்கான ஒப்புதலைப் புதுப்பிக்கவும், பராமரிப்புக்காக ஆலை வளாகத்தைத் திறக்கவும் விடுத்துள்ள கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது எனக் குறிப்பிட்ட்டிருந்தது.
தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கைக் காரணம் காட்டித் தற்போது வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது மாசுக் கட்டுப்பாடு வாரியம். பராமரிப்புக் காரணங்களுக்காகக் கூட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெளிவுபடுத்தி இருந்தது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முன்னரே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆலையை மூடவேண்டும் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்த்து செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்தனர். தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிர்வாகம் பதிலளிக்க நோட்டீஸும் அளித்துள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 8, 2019, 11:22 AM IST