Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! வேலைக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றிய விவகாரத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.
 

Supreme Court ordered to hear the case against Senthil Balaji
Author
First Published May 16, 2023, 11:59 AM IST

வேலை வாங்கி தருவதாக மோசடி

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த  2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை,கரூர், திருவண்ணாமலை,கும்பகோணம் என  செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, முறைகேடு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்து விட்டதாகவும், எனவே சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது,

Supreme Court ordered to hear the case against Senthil Balaji

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொறியாளர்  தர்மராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என்று கூறி பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு  தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, ராமசுப்பிரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டது. 

Supreme Court ordered to hear the case against Senthil Balaji

மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு

அப்போது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்கில் தொடர்ந்து வாதம் மற்றும் பிரதி வாதங்கள் முடிவடைந்த நிலையில்  இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து  இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேவைப்படும்பட்சத்தில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இரண்டு மாத்ததில்  அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.

Supreme Court ordered to hear the case against Senthil Balaji

அதேவேளையில் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலக்கத்துறை  விசாரிக்க கோரி அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிய மனுவை முடித்து வைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை.. அவரு இல்லைனா உன் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாய் இருக்கும்! வைத்தியலிங்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios