supreme court justices teased central government

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இருவேறு வழக்குகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிண்டல் செய்துள்ளனர்.

நாட்டில் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்கில் மத்திய அரசி செயல்பட்டுவருகிறது. டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் டிஜிட்டல்மயத்தை ஊக்குவிக்கும் வருகிறது. ஆனால், டிஜிட்டல்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடுகளே சில தருணங்களில் கிண்டல் செய்யும் வகையில் தான் உள்ளது.

முதல் கிண்டல்:

அப்படியான சம்பவங்கள் தான் கடந்த 2 தினங்களில் நடந்துள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஜார்கண்ட் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், அந்த வழக்கு தொடர்பான சில விவரங்களை நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் சஞ்சய் கிஷன் கௌல் ஆகியோர் கேட்டனர். அதற்கு, அந்த விவரங்களை மாநில அரசிடம் பெற்றுத்தருவதாக கூறிய வழக்கறிஞர், 2 வாரம் அவகாசம் கேட்டார்.

2 வாரத்திற்கு பிறகு நேற்று மீண்டும் நடந்த விசாரணையின்போது, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்காத வழக்கறிஞர், அரசு அலுவலகத்திற்கு சென்று தகவலை திரட்ட நேரம் ஆகும் என தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், பயங்கரமாக கிண்டலடித்தனர். இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும்? 5 ஆண்டுகள் போதுமா? என ஒரு நீதிபதி கேட்க, அதெல்லாம் போதாது.. 10 ஆண்டுகள் கொடுக்கலாம் என மற்றொரு நீதிபதி கிண்டல் செய்தார். இப்படியாக 2 நீதிபதிகளும் மாறி மாறி கிண்டல் செய்தனர்.

அதுமட்டுமல்லாமல், 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரஹாம் பெல் என்பவர், தொலைபேசி என்ற ஒன்றை கண்டுபிடித்தார். தற்போது நாம் அதை பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். அதன்மூலம் நீங்கள் அரசு அதிகாரிகளிடம் பேசி தகவலை பெற்றிருக்கலாமே என கிண்டலாக கேட்டனர்.

இரண்டாவது கிண்டல்:

இதேபோல், கடந்த 2 தினங்களுக்கு முன் நடந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் ஆத்திரமடைந்த நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் தீபக் குப்தா, ஆவணங்களை ஏன் தபாலில் அனுப்புகிறீர்கள்? வார்த்தைக்கு வார்த்தை எல்லாம் டிஜிட்டல்மயம் என சொல்கிறீர்கள்.. மெயில் அனுப்ப தெரியாதா? என கேட்டு தெறிக்கவிட்டனர்.