ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டை கட்டாயமாக்குவது சட்டவிரோதமானது என  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார் இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இந்நிலையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 78 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது . இதுவரை நாடு முழுவதும் சுமார் 2551 பேர் உயிரிழந்துள்ளனர் .  மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்  என்று சொல்லப்பட்டாலும் கூட  அதன் தாக்கம் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .  தொடர் ஊரடங்கு பொது போக்குவரத்து நிறுத்தம் என அனைத்திலும் தீவிரம் காட்டி வரும் நிலையில் , தற்போது தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள புதிய செயரி ஒன்றை  மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது . 

 

ஆரோக்கிய சேது என்ற இந்த செயலி  மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுகாதார துறை இணைந்து உருவாக்கியுள்ள ஒரு செயலியாகும் , கொரோனா விழிப்புணர்வுக்காக நாடு முழுவதும் பயன்படும் வகையில்  சுமார் 11 மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது .  இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் பட்சத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நபர் அருகில் இருந்தால் அதனை ஆரோக்கியா செயலி  நமக்கு காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறது  . பொதுவாக இது ஒரு நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் ,  ஆரோக்கிய  செயலியை பதிவிறக்கம் செய்வதற்காக பயனாளர்கள் அளிக்கும் தகவல்களை அரசு வேறு காரணங்களுக்காக பயன்படுத்தலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன .  மேலும் தனிநபர் ரகசியங்கள் திருடப்படலாம் என்றும் அச்சமும் முன்வைக்கப்பட்டுள்ளது .  மத்திய அரசு இந்த புகார்களை கண்டுகொள்ளாமல் ஆரோக்கிய செயலி பயன்பாட்டை தனியார் மற்றும் பொது துறை அலுவலர்களின் ஊழியர்களுக்கு கட்டாயமாக்கி உள்ளது. 

மற்றொரு புறத்தில் செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் 6 மாதங்கள் வரை சிறை  தண்டனை அல்லது ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நொய்டா போலீசார் மிரட்டவும் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன .  இந்நிலையில் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவில் முதல் வரைவு குழு தலைவராக இருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி .என் ஸ்ரீகிருஷ்ணா ஆரோக்கியா சேது பயன்பாட்டை கட்டாயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்று கருத்து தெரிவித்துள்ளார் .  எந்த சட்டத்தின் கீழ் ஆரோக்கியா செயலியை   கட்டுப்படுத்துகிறார்கள்.?  இவ்வாறு செய்வதற்கு எந்த ஒரு சட்டமும் இல்லையே..? என்று கூறியுள்ள கிருஷ்ணா நொய்டா போலீஸ் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என்றும் இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்றும் தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .