Asianet News TamilAsianet News Tamil

இது எங்க வேலையல்ல.. ஒரே வாரியத்தின் கீழ் நிர்வகிக்க முடியாது!! வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

supreme court cancelled river join request case
supreme court cancelled river join request case
Author
First Published Apr 9, 2018, 3:24 PM IST


நாட்டில் ஒரு சில இடங்களில் நதிநீர் பகிர்வு பிரச்னை இருப்பதால், அனைத்து நதிகளையும் இணைத்து, ஒரே வாரியத்தின் கீழ் நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், அனைத்து அணைகளையும், மத்திய அரசின் வாரியத்தின் மூலம் நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள். நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் நிர்வகிக்க வாரியம் அமைப்பது என்பது சாத்தியமற்றது. நாட்டின் சில பகுதிகளில் நதிநீர் பிரச்னை உள்ளதால், அனைத்து நதிகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர செல்வது ஏற்புடையதல்ல. இது நீதிமன்றத்தின் பணியும் அல்ல. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது என்பது எளிதான காரியம் அல்ல என கூறி அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios