நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. இவர் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இதனிடையே நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும்'' என விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் இதுகுறித்து கேட்டப்பட, அப்போது அவர், ''நடிகர் விஜய், ஜெயலலிதா அவர்கள் இருந்த போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என அவரின் தந்தை கூறியுள்ளதை வரவேற்பதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.