Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு ஆதரவு.. அதிமுகவில் இருந்து 5 முக்கிய பிரமுகர்கள் அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய OPS, EPS.!

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுகவை சேர்ந்த சத்யா தலைவராகவும், செல்வக்குமார் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு துணை தலைவர் செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். 

Support for DMK...Dismissal of 5 persons from AIADMK
Author
Thoothukudi, First Published May 14, 2022, 7:13 AM IST

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுகவை சேர்ந்த சத்யா தலைவராகவும், செல்வக்குமார் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு துணை தலைவர் செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். 

இந்நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வத்யாவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, அதிமுக சேர்ந்த பிரியா, பேச்சியம்மாள் உள்ளிட்ட 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற 14 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை சத்யா இழந்தார்.  இதில், அதிமுகவை சேர்ந்த 5 கவுன்சிலர் அடங்குவர். இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த 5 பேரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணபை்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும் 

S. அழகேசன் (மாவட்ட ஊராட்சிக் குழு 12-வது வார்டு உறுப்பினர், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்)

S. நடராஜன் (மாவட்ட ஊராட்சிக் குழு 3-வது வார்டு உறுப்பினர், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் )

N. பாலசரஸ்வதி (மாவட்ட ஊராட்சிக் குழு 11-வது வார்டு உறுப்பினர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) 

S. தேவராஜ் (மாவட்ட ஊராட்சிக் குழு 8-வது வார்டு உறுப்பினர், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் )

S. தேவ விண்ணரசி (மாவட்ட ஊராட்சிக் குழு 17-வது வார்டு உறுப்பினர், சாத்தான்குளம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் )

S. குருராஜ் (தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்)

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios