சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் ஒருவித விநோத நோயால் (கொரோனா) பாதிக்கப்பட்டவர்களை போய் சீனா சென்று காப்பாற்றுவார். அவர் நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளி சேதப்படுத்தும். சில மாதங்களுக்கு முன் கொரோனா உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. அதன் தாக்கம் அடங்குவதற்கு முன் வெட்டுக்கிளி உலகில் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 7 மாநிலங்களில் வெட்டுக்கிளி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சூர்யா படங்களில் வரும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால் அடுத்து அவரது படத்தில் வந்த சம்பவம் என்ன நடக்குமோ என கற்பனையாகவும், வினோதமாகவும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.