Asianet News Tamil

சூப்பர் போட்டோ..! காமராஜருக்கு பிறகு ஒரு அரிய காட்சி.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  திமுகவில் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், நான் தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே களத்தில் நிற்கிறேன் என பதிலடி கொடுத்திருந்தார். 

Super photo ..! A rare scene after Kamaraj.
Author
Chennai, First Published Jul 8, 2021, 11:15 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

முதலமைச்சராகப் பொறுப்பேற்று முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு திருவாரூர் ஒன்றியக் கழகத்தின் செயலாளராக பணியாற்றியவரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பருமான புலிவலம் ஆர்.பி சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். 

அதில் திமுகவின் மூத்த தொண்டரான சுப்பிரமணியன் இருக்கையில் அமர்ந்திருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நின்றவாறு சுப்பிரமணியனை பணிவுடன் நலம் விசாரிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது.இந்தப் புகைப்படத்தை பார்க்கும்  பலர் இதுதான் திமுக,  திமுக என்பது தலைவர்களால் ஆனது அல்ல அது தொண்டர்களாலான இயக்கம் என பாராட்டி பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக மண்ணில் சமத்துவத்தையும் சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியை தோற்றுவித்த அண்ணா தொடங்கி, அக்கட்சியை தனது அயராத உழைப்பால் உரமிட்டு வளர்த்த மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி முதல் தற்போதைய முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வரை, தொண்டரோடு தொண்டராக இருந்து கட்சியை வளர்த்துள்ளனர் என்றால் மிகையல்ல,  கிட்டத்தட்ட அரைநூற் றாண்டுகாலம் ஒரு இயக்கம் மாறி மாறி ஆட்சி பீடத்தை அலங்கரித்து வருகிறதென்றால் அது மக்களின் உணர்விலும், உதிரத்திலும் கலந்துவிட்டது எனபதன் வெளிபாடேயல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்.?  திமுக என்பது தலைவர்களால் ஆனது அல்ல அது தொண்டர்களால் ஆனது என அக்கட்சி தலைவர்கள் அடிக்கடி முழங்குவது வெறும் மேடை அலங்காரத்திற்கு அல்ல, அது ஆகப்பெரும் உண்மை என்பதை சில நிகழ்வுகள் மூலம் அடிக்கடி உணர்த்திக் கொண்டே வருகின்றனர். 

அந்த வகையில், முதலமைச்சராக வெற்றி பெற்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று காலை காட்டூரில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று குடும்பத்துடன் மரியாதை செலுத்தினார். பின்னர் திருவாரூர் ஒன்றிய கழகத்தின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பரான புலிவலம் ஆர். பி சுப்பிரமணியனை முதலமைச்சர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது மூத்த கட்சி  தொண்டரான புலிவளம் ஆர்டி சுப்பிரமணியன் இருக்கையில் அமர்ந்திருக்க, முதலமைச்சர் ஸ்டாலினும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் நின்றவாறு பணிவுடன் அவரை நலம் விசாரித்துள்ளனர், அதற்கான புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த புகைப்படம் குறித்து பலரும் பலவகைகளில் கருத்து தெரிவித்துவருகின்றனர், 

குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வெற்றி என்றால் விருது, தோல்வி என்றால் விழுப்புண் என பலமுறை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மேடைகளில் முழங்கியதை கேட்டிருக்கின்றோம், அதேபோல் அவர் திமுக தலைவராக பொறுப்பேற்றது முதல், தன்னை கட்சித் தலைவர் என்று மட்டும் யாரும் எண்ணிவிட வேண்டாம் நான் தொண்டருக்கு தொண்டனாகவே இருந்து பணியாற்றுவேன் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் என பலமுறை செல்லியதுண்டு, அதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு திமுக கட்சி அல்ல கம்பெனி என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தபோது,  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  திமுகவில் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், நான் தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே களத்தில் நிற்கிறேன் என பதிலடி கொடுத்திருந்தார். அந்த வகையில் அவர்கள் இருவரது பேச்சும் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்து காட்டியுள்ளது. 

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், திருவாரூர் ஒன்றிய கழகத்தின் செயலாளராக பணியாற்றியவர் - முத்தமிழறிஞர் கலைஞரின் நண்பர் திரு.புலிவலம் ஆர்.பி.சுப்பிரமணியன் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தோம். சுப்பிரமணியன் அவர்களின் கழகப்பணியை என்றென்றும் போற்றுவோம். நன்றி. என பதிவிட்டுள்ளார். அதாவது, கட்சிக்காக பாடுபட்ட கடைத் தொண்டன் இருக்கையில் அமரந்திருக்க, முதல்வரும், சட்டமன்ற உறுப்பினரும் பணிவுடன் பரஸ்பரம் நலம் விசாரிக்கும் காட்சி,  திமுக தொண்டர்களையும் தாண்டி பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. இது வெறும் புகைப்படமல்ல, இதுதான் திமுக, அண்ணாவும், கலைஞரும் கற்றுத் தந்த பண்பை ஸ்டாலின் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஆவணம் இது என பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இப்புகைப்படம் குறித்து இன்னும் பலர் பிரதமராகும் வாய்ப்பு பலமுறை தனக்கு கிடைத்தும் அதை தொண்டர்களுக்கு கொடுத்து அழகு பார்த்தவரும், காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைமைகளான பிரதமர் நேரு, இந்திரா காந்தியே  தலைவணங்கி கைதொழுத  கிங்மேக்கர் காமராஜ்தான் நினைவுக்கு வருகிறார் என வானளவு புகழ்ந்து வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios