ஒருவருக்கு ஒருவர் பதவி ஆசையில் போட்டி போட்டு கொண்டிருப்பதால் அதிமுகவே இல்லாமல் போய்விடும் போல என்றும் மக்கள் மன்றமே இறுதி முடிவு செய்ய வேண்டும் எனவும் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் தெரிவித்துள்ளார். 

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் பயங்கரமாக முட்டிகொண்டினர். ஆனால் தற்போது இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், பன்னீருக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஒபிஎஸ்சை கட்சியில் இணைத்ததும் சசிகலாவை நீக்குவது என்ற முடிவை எடப்பாடி அணியினர் எடுத்துள்ளனர். 
இதனால் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த சில எம்.எல்.ஏக்கள் டிடிவி பக்கம் சாந்துள்ளனர். மேலும் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், ஒருவருக்கு ஒருவர் பதவி ஆசையில் போட்டி போட்டு கொண்டிருப்பதால் அதிமுகவே இல்லாமல் போய்விடும் போல என்றும் மக்கள் மன்றமே இறுதி முடிவு செய்ய வேண்டும் எனவும்  தெரிவித்தார். 

மேலும், ஒபிஎஸ்சுடன் கூட்டணி வைத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது எனவும், தான் எந்த அணிக்கும் செல்லமாட்டேன் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து, எம்.எல்.ஏ என்றால் அனைத்து தரப்பிலும் செல்ல வேண்டும் எனவும் ஒரு அணிபக்கம் மட்டும் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.