சுகேஷின் சொகுசு வாழ்க்கை.. 70 கோடியில் கார்கள்.. மோசடி பேர் வழிக்கு மலைக்க வைக்கும் அளவுக்கு இவ்வளவு சொத்தா?
உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவர் கூட இவ்வளவு ஆடம்பரத்துடன் இருந்திருப்பார்களா என்று சந்தேகப்படும் அளவிற்கு சுகேஷ் சந்திரசேகரின் சொகுசு வாழ்க்கை இருந்ததாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் வழக்கில் லஞ்சம் வாங்கி கைதாகி டெல்லி திகார் சிறையில் உள்ள சுகேஷ் உலகின் பெரும் பணக்காரர்களையே மிஞ்சும் வகையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தரப்பில் 50 கோடி வரை பேரம் பேசி இரண்டு கோடி பணத்தை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பெறும்போது டெல்லி போலீசாரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளிலிருந்து சுகேஷ் சந்திர சேகரின் வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததும் , பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் அன்பளிப்பாக பெற்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் வங்கி கணக்கில் பணபரிமாற்றம் செய்ததும் பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள் அன்பளிப்பாக பெற்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன் திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மத்திய அரசின் ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய பதவிகள் வாங்கித் தருவது சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் செய்து தருவதாகக் கூறி சிறையில் இருந்தபடியே செல்போனில் பேசி தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் 200 கோடி வரை லஞ்சம் பெற்று அன்பளிப்புகள் பெற்றதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அன்பளிப்பு மூலம் பெறப்பட்ட சொகுசு கார்கள் சென்னை கானத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை கானத்தூர் சினேகா கார்டனில் உள்ள சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது . இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள மகாராஷ்டிரா , மத்திய பிரதேசம், அரியானா, இமாச்சல பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு என பல்வேறு மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் சினிமா சூட்டிங்கில் பயன்படுத்தப்படும் நவீன கேரவன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவரது வீட்டில் இருந்து வழக்கு தொடர்பான விவரங்கள் முக்கிய தகவல்களை வைத்து இருந்த லேப்டாப் கணக்கில் வராத 82 லட்சம் ரொக்கப் பணம் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . சோதனை நடத்தி அதிகாரிகள் கட்டிடத்தின் பிரம்மாண்டம் , கட்டுக்கட்டாக பணம், நகை ஆவணங்கள் பல கோடி சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்பதை பார்த்து மிரண்டு போய் உள்ளார்கள் . உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவர் கூட இவ்வளவு ஆடம்பரத்துடன் இருந்திருப்பார்களா என்று சந்தேகப்படும் அளவிற்கு சுகேஷ் சந்திரசேகரின் சொகுசு வாழ்க்கை இருந்ததாக கூறப்படுகிறது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.