Sukesh Chandrasekars partner Pulkit has been arrested in a case of bribing a double leaflet
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். இதனால் டிடிவி தினகரனுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
அதை திரும்ப பெற எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர்.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளார்.
சுகேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார் டிடிவி. இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இரட்டை இலை வழக்கு உட்பட பல வழக்குகள் சுகேஷ் சந்திரசேகர் மீது உள்ளது. இந்நிலையில் கடந்த 8, 10 தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சுகேஷின் கூட்டாளி புல்கித் குந்த்ராவை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இவர் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க சதிதிட்டம் தீட்டியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிடிவி தினகரனுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
