எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

 

சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். 

கடந்த சில நாட்களில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஜூலை 15ம் தேதி 7வது மாடியிலிருந்து குதித்து ஒரு ஸ்ரீ ராகவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். மே மாதம் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதலாமாண்டு படித்துவந்த ஜார்கண்ட் மாநில மாணவர் அனுஷ் சவுத்ரி என்பவர் நேற்று விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

மாணவர்கள் சொந்த பிரச்னை காரணமாகவும், தேர்வில் தோல்வியடைந்த விரக்தியாலும் தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறி வந்தது. இந்த வழக்குகளை மறைமலைநகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலைலையில் இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.