Asianet News TamilAsianet News Tamil

திடீர் பரபரப்பு... ஓ.பி.எஸ் வேண்டாம் போகட்டும்... 9 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி எடுத்த அஸ்திரம்..!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லாமல் நடைபெறுகிறது.

Sudden excitement ... Let the OPS go ... Edappadi with 9 district secretaries
Author
Tamil Nadu, First Published Jun 4, 2021, 1:18 PM IST

அதிமுக தலைமை அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  திடீரென 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். சசிகலா தொண்டர்களுடன் பேசிய ஆடியோ வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லாமல் நடைபெறுகிறது.Sudden excitement ... Let the OPS go ... Edappadi with 9 district secretaries

கட்சி நிர்வாகிகளிடம் சசிகலா பேசிய ஆடியோக்கள் பொதுவெளியில் ரிலீஸாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக, அதிமுகவில் ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோக்களை சசிகலாதான், தனது உதவியாளர் மூலம் ரிலீஸ் செய்ய  வைத்தார். சசிகலாவின் அந்த ஆடியோ பேச்சுக்களுக்கு எதிராக பேட்டிட்யளித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லை. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தாமல் அவர் அமைதியாக இருக்க வேண்டும். அவரது பேச்சை அதிமுகவினர் கண்டுகொள்ள மாட்டார்கள்” என்றெல்லாம் கடுமையாகப் பேசியிருந்தார்.Sudden excitement ... Let the OPS go ... Edappadi with 9 district secretaries

கே.பி. முனுசாமியின் பேட்டியை சசிகலாவுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார்கள் அவரது உதவியாளர்கள். முனுசாமியின் பேச்சைக் கேட்டு எந்த ரியாக்சனையும் காட்டாத சசிகலா, “அதிமுகவில் முனுசாமி எப்படி ஏற்றம் பெறுகிறார் என்பது அவருக்கே தெரியும். நான் இல்லைன்னா முனுசாமிக்கு அதிமுகவில் இடம் கிடையாது. இப்போ கூட, அவர் அவராகப் பேசவில்லை. பழனிசாமி சொல்லித்தான் பேசுகிறார். லாப நட்ட கணக்கு போட்டுத்தான் எல்லோருமே அரசியல் செய்கிறார்கள் என்று ஓப்பனாக பகிர்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா” என விவரிக்கிறார்கள் சசிகலா தரப்பின் உள்வட்டாரங்களை அறிந்தவர்கள்.

 Sudden excitement ... Let the OPS go ... Edappadi with 9 district secretaries

இந்த கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லாமல் நடைபெறுவதால் அதிமுகவில் வெளிப்படையாகே மோதல் போக்கு தெரிய வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios