திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., 58 வயதான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் அமைச்சரான இவர், தி.மு.க., மீனவரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். கருணாநிதி முதல்வராக இருந்த போது, மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சாமி, கே.வி.குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளார். 2006-2011-ல் தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் கே.பி.பி. சாமி பணியாற்றினார்.