சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், திமுகவில் நிர்வாகிகள் சிலரை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது அக்கட்சித் தலைமை. அதன்படி, புதிய கொள்கை பரப்புச் செயலாளர், ஊடக விவாதங்களில் பங்கேற்போர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Changes in DMK executives: தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஏறக்குறைய ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், அதற்கு ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக ஒருபுறம் ரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடக்கும் நிலையில், மறுபுறம் கட்சி உட்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பலவீனமான, செயல்படாத நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் திமுகவில் சில அதிரடி மாற்றங்களை அக்கட்சியின் பொதுத் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

திமுக மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சி.வி.எம். பி. எழிலரசன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக மாணவர் அணி தலைவராக இருந்து வரும் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, மாணவர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திமுகவில் கட்சிப் பதவிகள் விற்பனைக்கு... போஸ்டர் அடித்து மானத்தை வாங்கும் உடன்பிறப்புகள்..!

திமுக மாணவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வரும் பூவை. சி. ஜெரால்டு, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக மாணவர் அணி இணைச் செயலாளராக இருந்து வந்த எஸ். மோகன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர, திமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோரின் விவரங்களையும் திமுக அறிவித்துள்ளது. அதன்படி, திமுக எம்.பி.க்கள் செல்வகணபதி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் ஆகியோரும் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்பர்.
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? 3 முக்கிய தீர்மானங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி சரவெடி!