Asianet News TamilAsianet News Tamil

பேரறிவாளன் உள்பட எழுவரும் காலம் முழுக்க சிறையில் இருக்கணும்.. ஜனாதிபதிக்கு சு.சாமி எழுதிய பரபர கடிதம்..!

ராஜீவ் காந்தி கொலையாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார்.
 

Subramaniyan samy wrote a letter to president Ramnath govind regarding raijv killers release
Author
Delhi, First Published May 26, 2021, 9:55 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அண்மையில் கடிதம் எழுதினார். எழுவர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இதேபோல எழுவரை விடுதலை செய்வதில் பாஜகவும் ஆர்வம் காட்டவில்லை.Subramaniyan samy wrote a letter to president Ramnath govind regarding raijv killers release
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எழுவரையும் விடுவிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.  அதில், “ராஜீவ் காந்தி கொலையாளிகள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டும்.Subramaniyan samy wrote a letter to president Ramnath govind regarding raijv killers release
இதை உறுதி செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்து கொள்ளாது. அதற்கேற்ப ஓர் எச்சரிக்கையாக குடியரசு தலைவரின் முடிவு அமைய வேண்டும். எழுவர் விடுதலை குறித்து மத்திய-மாநில அரசுகள் எதிர்காலத்தில் பரிந்துரை செய்தாலும் அதை ஏற்கக் கூடாது” என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios