அரசியல் கோமாளி என மற்றவர்களால் விமர்சிக்கப்படும் சுனா.சுவாமி ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சைக்குரிய முறையில் போராட்டம் நடத்துபவர்களை பொறுக்கிகள் என்று டுவிட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைகுரிய டுவிட் வாசகத்தை நீக்க வேண்டும் என்று சென்னை வழக்கறிஞர் அளித்த புகாரை அடுத்து வாசகம் நீக்கப்பட்டுள்ளது.

தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் சுப்ரமணியம் சுவாமி ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கிண்டலடித்து டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். 

இந்நிலையில் போராட்டம் நடத்துபவர்களை , இளைஞர்களை மாணவர்களை பொறுக்கிகள் என்று டுவிட்டரில் சுப்ரமணியம் சுவாமி நேற்று பதிவு செய்திருந்தார். இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ச்சியாக எதிராக எழுதி வருகிறார். தமிழ் பொறுக்கிகள் எலிகள் என எப்போதுமே டுவிட்டரில் எழுதிவரும் சுப்ரமணியம் சுவாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது கொச்சை புத்தியை காட்டியுள்ளார்.

இந்நிலையில் தனது கோபத்தை காட்டும் விதத்தில் சுப்ரமணிசுவாமி தமிழ் பொறுக்கிகள் மற்றவர்கள் அனுதாபத்தை தேடும் வண்ணம் தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இதன் மூலம் தேசபக்த சக்திகளின் அனுதாபத்தை பெறலாம் என்று தமிழ் சினிமாவில் பேசும் ஆங்கிலம் போல டுவிட் செய்கிறார்கள். தமிழகத்தின் நிலை இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டதே என்று போட்டிருந்தார்.

சுப்ரமணியன் சுவாமியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து வலைதளங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது.  பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர் இது குறித்து டுவிட்டர் அமைப்புக்கு சுப்ரமணியம் சுவாமியின் டுவிட்டர் வாசகம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக விஷமத்தனமானது , உள்நோக்கம் கொண்ட அவதூறு வாசகம் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் சுப்ரமணியம் சுவாமியின் டுவிட்டர் பக்கத்தையும் முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பல்வேறு கேள்விகளை கேட்ட டுவிட்டர் அமைப்பு இறுதியாக சுனா.சாமியின் பொறுக்கிகள் டுவிட்டர் வாசகத்தை நீக்கியுள்ளது.

இதனிடையே இந்திய தேசிய லீக் அமைப்பு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக டுவிட்டரில் பதிவு செய்யும் சுப்ரமணியம் சுவாமி மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க உள்ளனர்.